எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது
ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை
வாய்ந்ததாகவே உள்ளது. நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம்
எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு.
ஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். எந்த மாதத்திலும் 9,
18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக
கருதப்படுகிறார்கள். ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை
குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.
வலைப்பதிவு பட்டியல்
ஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை
இருப்பது போல 8 ம் எண்ணிற்கு உண்டு. அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட
ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8ம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததாகவே
கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூட 8 வதாக அஷ்டமி திதியில்
பிறந்தவர்தான். ஒவ்வொரு மாதமும் 8,17,26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 8ம்
எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். 8ம் எண்ணுக்குரிய கிரகம் சனி
பகவானாவார். எட்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் தி.றி ஆகும்.
7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை
மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு,
ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப்
பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள்
ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில்
பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும்
இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில
எழுத்துக்கள் ளி. ஞீ ஆகியவை.
மனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு
வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான
சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான
தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன. அதுபோல 6 என்ற எண்ணும் மனித
வாழ்வில் சிறந்த முறையில் செல்வாக்கினை பெற்றதாக திகழ்கிறது. 6,15,24 ஆகிய
எண்களில் பிறந்தவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 6ம்
எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார். சுக்கிரனை வெள்ளி என்றும்
அழைப்பார்கள். வாரத்தில் 6ம் நாளாக வெள்ளிக்கிழமை வரும். வெள்ளிக்கிழமை
வாரத்தின் சிறந்த நாளாக கருதப்படுகிறது. 6ம் எண்ணுக்குரிய ஆங்கில
எழுத்துக்கள் ஹி.க்ஷி.கீ ஆகியவைகள் ஆகும்.
ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி,
வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. பஞ்ச
என்பது 5 ஐ குறிக்கும். மனித வாழ்க்கை ஆகாயம், பூமி, நீர், நெருப்பு,
காற்று என்னும் பஞ்ச பூதங்களுக்குள் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி தமிழ்
இலக்கியங்களில் ஐம்பால்களான ஆண்பால், பெண் பால், பலர் பால், பலவின்பால்,
ஒன்றன் பால் போன்றவை ஐந்து வகையாகத்தான் அமைந்துள்ளன. நாம் பூமியின்
வகைகளைக்கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான
கத்தான் பிரித்துள்ளோம். வீட்டில் ஏற்றக்கூடிய குத்து விளக்கில் கூட இந்து
முகங்கள் உள்ளதை நாம் அறிவோம். எனவே ஐந்து என்ற எண்ணும் நம் வாழ்வில்
பின்னிப் பிணைந்துள்ள சிறப்பான எண்ணாகும். 5, 14, 23 ம் தேதிகளில்
பிறந்தவர்கள் 5ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக உள்ளார்கள்.
ஐந்தாம் எண்ணுக்குரிய கிரகம் புதன் பகவானாவார். ஐந்தாம் எண்ணிற்குரிய
ஆங்கில எழுத்துக்கள் E,H,N,Xஆகும்.
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே
சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு
உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம்
தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம்
எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட
சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று
வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம்
முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று
என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள்.
முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் C,G,L,S ஆகியவை. 3,12,21,30
தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.
இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர்
முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு,
கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம்
வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின்
ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். 2ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன்.
இரண்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் B,K .Rஆகியவை.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித
வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும்
அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது
வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய
தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம்
எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில
எழுத்துக்கள் A,I,J,Q,Yஆகியவை.
பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த 'P' என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே பொறுப்புகள் தலைமேல் வந்து வீழ்வதால் குடும்ப சூழ்நிலையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும். தீட்டும் திட்டங்கள் அவ்வப்பொழுது தடைபட வாய்ப்புண்டு. ஆனால், இடைவிடாது உழைப்பர். இந்த எழுத்துகளில் பெயர் துவங்குவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிந்தால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பிறர் துன்பத்தை தனக்கு வந்தது போல் நினைத்து அவர்களுக்கு உதவுவர். தற்போதைய நிலையை விட உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
நாம் அனுபவிக்கும் அனைத்துப் பொருட்களும் இந்த பூமியிலிருந்து தான் விளைகின்றன. சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் உருண்டையாகத்தான் உள்ளன. வேற்றுக் கிரகத்திலிருந்து எந்தப் பொருட்கள் வந்தாலும் அடுத்த கிரகம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இது இயற்கை நியதி. தானுண்டு, தன் வேலை உண்டு, யாரையும் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை, பிறர் தொந்தரவையும் ஏற்பதில்லை என்றிருக்கும் `O' என்ற எழுத்தில் சூரியக்கதிர்கள் முற்றிலுமாக உட்புக முடியாமல் இருப்பதால் இவ்வெழுத்தில் உள்ளவர்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் முற்றிலுமாக மாறுபாடான குணாதிசயத்தைப் பெற்றவர்களாக இருப்பர்.
ஆன்மீகத் தென்றலான இவர்கள் மாபெரும் ஆராய்ச்சியாளர்கள். மந்திரம், தந்திரம், சூட்சும சக்தி, மனவசியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடுடையவர்கள். சாஸ்திர, சம்பிரதாயங்களில் மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நீதியை நிலைநாட்டுவதில் முனைப்பாக இருப்பர். இவ்வுலகத்தில் நடக்கும் அதர்மங்களை நினைத்துக் கண்ணீர் விடுவர். கானகங்களில் குடியிருக்க விரும்புவர். இருப்பினும் சோம, சுராபானங்களில் மூழ்கிவிடுவர் (போதை வஸ்துக்கள்). 50 வயதிற்கு மேல் உலக விடயங்கள் பொய்யானவை, எதுவும் நிலையற்றது என்று புலம்புவர். ஞான வழியைப் பின்பற்றுவர். சென்ற பிறவியில் என்ன நடந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற விடயங்களை இவர்கள் மனம் அடிக்கடி அறிவித்துக்கொண்டேயிருக்கும். மனிதர்கள் மனத்திற்கு மாறுபட்ட விடயங்களை அலசுவதும், மாற்று கிரகங்கள் எப்படி இருக்கும், அதில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்பது பற்றியும் அனுதினமும் பேசுவர். ஆடைகள் அணிவதில் அன்னம் போன்று பிரகாசிப்பர். கண்களில் தெய்வீகம் தெரியும். மத விடயங்களில் மாபெரும் ஈடுபாடு உண்டு.
உயிர்ப்பலி வேண்டாமென்பர். கடல் கடந்து சென்று ஊதியம் பெறும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் அமைதியுடன் காணப்படும் இவர்கள், தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பிவிடும் குணமும் கொண்டவர்கள். கேட்டால் தத்துவம் என்பர். புலன் அடக்கம் இவர்களுக்கு அதிகம் உண்டு என்றாலும், காதல் தோல்விகளின் கதாநாயகர்களும் இவர்களே. கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். இவர்கள் பேச்சில் மயங்கும் மனிதர்கள் ஒரு கூட்டமாக தினசரி கூடுவர். இவர்களின் கருத்தை கேட்டவண்ணமிருப்பர். கற்பனைக் கடலான இவர்கள் வாழ்வே மாயம் என்பர். மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் இவர்கள் உலகப் புகழ் பெறும் வாய்ப்புகள் உண்டு. எதைச் சொன்னாலும் மக்கள் கேட்டுக்கொள்வர் என்பதால், தேவையற்ற (உலகிற்கு) கருத்துகளைக் கூறுவதை விட்டு விடுவது அனைவருக்கும் நலம். இவர்களின் பல கருத்துகள் தண்ணீரில் எழுத்துப் போன்றவையே.
இவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் சக்தி குறைவாக இருக்கும். இதைத் தவிர்க்க தூய்மையான இடங்களில் வசிப்பதும், உணவு அருந்துவதும் மிக முக்கியம். பயணக் கட்டுரை எழுதுவதில் வல்லவர். பொருள் வரவு - பல தடைகளைக் கடந்து வரும். வர ஆரம்பித்தால் அவ்வளவுதான். யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. மனோ தைரியம் அவசியம் வேண்டும். வாழ்வில் மாபெரும் நன்மைகளை இவர்களுக்கு மனமுவந்து செய்பவர்கள் R,K,B என்ற எழுத்துகளில் ஒன்றைப் பெயரின் முதல் எழுத்தாக உடையவர்களே ஆவர்.
இவர்களுக்கு சினிமா, கவிதை, புத்தகம் எழுதுவதாலும், விவசாயம், பால் பண்ணை, காகித ஆலை, இலத்திரனியல், வானசாஸ்திரம் போன்றவையும் பெரும் பொருள் தரும். நட்புக்கு விசுவாசமாக இருப்பார்கள். பிறர் கூறிக்கொள்ளும் அளவிற்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டுவர். அடுத்தவர் கருத்தை அன்புடன் கேட்பர். தனக்கு ஒத்துவராத காரியங்களில் இறங்கமாட்டார்கள். திடீர் அதிர்ஷ்டத்தில் அறவே நம்பிக்கை இல்லாதவர். அடிக்கடி வாகனங்களை மாற்றிக் கொள்வர். தலைவலி, தோல்நோய், மூட்டுவலி, வயிறு சம்பந்தமானவற்றை ஒடுக்கி மனச்சோர்வை விட்டு, உணவுக் கட்டுப்பாட்டிற்கு வந்தால் போதும்.
மதப்பற்று அதிகம் உள்ள இவர்கள் மாற்று மதத்தினரையும் மனிதர்களாகக் கருதுவது மாபெரும் மாண்பாகும். குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குதூகலமாக வையத்துள் வாழ்வாங்கு வாழ இறை நம்பிக்கை கைகொடுக்கும். `O' வில் பெயர் அமைந்தோர் கூறும் கருத்துக்கள் நன்மையளிக்கும்.
ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.
ஏனைய பதிவுகள்
எந்த ஜீவனாக இருந்தாலும் ஐம்பெரும் பூதங்களின் ஆதரவு இருந்தால்தான் வாழ முடியும். அதுபோலவே, N என்ற எழுத்தில் சூரியக் கதிர்கள் பட்டு அதற்குள்ளேயே இருப்பதால், சகலமும் அறிந்த இந்த பிரஹஸ்பதிகளை எவராலும் எளிதில் அடக்க முடியாது. பிறர் செய்து முடிக்க முடியாத காரியங்களை லாவகமாக முடிப்பர் இந்தக் கில்லாடிகள். அனைவரையும் தன் செயல், பேச்சால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இவர்களது சிறப்பு. தூக்கம் என்பது பிடிக்காத காரியம். தூங்குமூஞ்சிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.
பெயரின் முதல் எழுத்து - L
வேதங்களை விலாவாரியாக அலசுவது, விவாதம் செய்வது, வீரமான மனது இவற்றை இயல்பாகவே பெற்றவர்கள் `M' என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்கள். ஆனால் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் பலவீனமே. யாரும் செய்ய முடியாத காரியங்களைச் செய்வது இவர்களின் விசேடத்தன்மையாகும். தாங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறரிடம் கட்டாயப்படுத்தித் திணிப்பர். கயமைத்தனத்தை எதிர்ப்பது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது இவர்களின் சிறப்பாகும்.
பெயர் எண் கணிப்பது எப்படி
பெயர் எண் பலன்கள் (எண் 1 ) கீழே பார்க்கவும்
பெயர் எண்: 1
பெயர் எண் கூட்டுத்தொகை : 10
பெயர் எண் பலன்கள் (எண் 1 ) கீழே பார்க்கவும்
பெயர் எண்: 1
பெயர் எண் கூட்டுத்தொகை : 10
10ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் கண்ணியமும், கீர்த்தியும் உடையவர்கள்.
வாழ்க்கையில் அடிக்கடி அதிர்ஷ்ட மாற்றங்கள் ஏற்படும். எளிதாகப் பிரபலம் அடைவர். எனவே,
இவர்களுடைய நடவடிக்கைகள் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கை
உண்டு. ஒருநாளும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது.
தேவராய சுவாமிகள் அருளிய ஸ்ரீ கந்தர்சஷ்டி கவசம்
சஷ்டியை நோக்கச் சரஹணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்;
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மைய நடஞ்செயும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக
சஷ்டியை நோக்கச் சரஹணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்;
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மைய நடஞ்செயும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக
பெயரின் முதல் எழுத்து - L
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம் கொண்ட இவ்வெழுத்தில் சூரியக்கதிர்கள் பாய்ந்து பெயர் முழுக்கப் பரவுவதால் பரபரப்பும், சுறுசுறுப்பும், புத்திகூர்மையும், மனதில் பட்டதை தயங்காமல் கூறும் குணாதிசயமும் இவர்களை என்றும் அரங்கத்தில் முந்தியிருக்கச் செய்யும்.
பெயரின் முதல் எழுத்து - K
அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம் மிகுந்தவர்களாகவும் மாயசக்தி, மனோவசியம், கற்பனை வளம், கதை, கட்டுரை படைக்கும் ஆற்றல மிக்கவர்களாகவும் இருப்பர். பிறரின் பாராட்டுதலும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
- உங்களுக்கான லட்சியம் ஒன்றை உருவாக்குங்கள். அவை குறுகிய கால லட்சியங்களாகவும் இருக்கலாம். அதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள். அந்த நினைவூட்டல் உங்களை வழிநடத்திக் கொண்டே இருக்கும்.
மார்கழி விடியலின் பனிக்குளிரில்
கோலமிடும் எனது தங்கைக்கு
நான் உதவுவதெல்லாம்,
எதிர் வாசலில் கோலமிடும்
கோலமிடும் எனது தங்கைக்கு
நான் உதவுவதெல்லாம்,
எதிர் வாசலில் கோலமிடும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















