பெயரின் முதல் எழுத்து - L
வேதங்களை விலாவாரியாக அலசுவது, விவாதம் செய்வது, வீரமான மனது இவற்றை இயல்பாகவே பெற்றவர்கள் `M' என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்கள். ஆனால் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் பலவீனமே. யாரும் செய்ய முடியாத காரியங்களைச் செய்வது இவர்களின் விசேடத்தன்மையாகும். தாங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறரிடம் கட்டாயப்படுத்தித் திணிப்பர். கயமைத்தனத்தை எதிர்ப்பது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது இவர்களின் சிறப்பாகும்.
பெயரில் பல இடங்களில் வந்தால் நல்லது . உழைப்பு, விடாமுயற்சி,ரசிகத் தன்மை, நுட்பமான அறிவு ஆகியன இந்த எழுத்தின் குணங்களாகும். தன்கையே தனக்கு உதவி என்பதற்கு இவ்வெழுத்தை அடையாளமாகக் கூட கொள்ளலாம். வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் இவ்வெழுத்தை விலக்கலாம்.
இவர்களுக்கு வாய்தான் எதிரி. ஆனாலும் அழகான உச்சரிப்பினால் மக்களைக் கவர்வர். நாடு நன்றாக இருக்க வேண்டும், யாருக்கும் எந்தத் தீங்கும் நடக்கக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பர். "அரசாங்கத்தின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. எனவே, அந்தத் திட்டத்திற்குப் பதில் வேறு திட்டங்களை அறிவிக்க வேண்டும்" எனப் பேசுவதுடன், அதற்காகப் போராடவும் செய்வர். தன் சுதந்திரத்தில் யாரும் தலையிட விரும்பாத இவர்கள் பிறரது சுதந்திரத்திற்காகவும் போராடுவர்.
உலகில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் இவர்களிடம் தெரிந்து கொள்ளலாம். சுற்றுப்பயணம் செல்வதில் மன்னர்கள். இயற்கைக் காட்சியை ரசித்து இன்புறுவர். மசால் பொருட்களை உண்பதில் பிரியம் காட்டுவர். தன் எண்ணங்களைக் கோர்வையாக்கி, அடுத்தவர்களை அசரச் செய்வர். சோதிடம், சாஸ்திரம், வானியல், விஞ்ஞானம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். தோல்வி என்பது வாழ்வின் ஒரு அத்தியாயம் என்பர்.
அரசியல் தந்திரம் வாய்ந்த இவர்கள், பிறருக்குப் புரியாத புதிராக இருப்பர். எது பற்றியும் கவலை கொள்ளாத இவர்கள், வெட்டவெளிச்சமாகத் தன் கருத்துகளை வெளியிட்டு அதிர்ச்சியடையச் செய்வர். மென்மையான செயற்பாடுகளை எதிர்ப்பார்கள். தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் இவர்கள், பிறர் கருத்துகளைத் துச்சமாக மதிப்பதை நிறுத்தினால், மேலும் பிரகாசம் அடையலாம். அனைவரிடமும் கலகலப்பாகப் பழகும் இவர்களுக்கு, 1, 10, 19, 28 திகதிகளில் பிறந்தவர்கள் அதிக நன்மை செய்வர். மற்றவர்கள் இவர்கள் பேச்சை ஜீரணிக்க முடியாமல் விலகிவிடுவர்.
கருத்துக் கருவூலமான இவர்களுக்கு ஆன்மீகத்தில் நல்ல நம்பிக்கை உண்டு. கடுமையான செலவாளியாக இருப்பர். வாசனைத் திரவியங்கள், உயர்ந்த ஆடைகள் போன்றவற்றை விரும்புவர்.
அடிக்கடி மூட்டு வலி, வயிறு சம்பந்தமான நோய்கள், கண்நோய் போன்றவற்றால் அவதி ஏற்படலாம். எந்தச் செயலிலும் லட்சியத்துடன் செயற்படும் வல்லமை வாய்ந்தவர்கள். அரசியல், திரைப்படம், புத்தகம் வெளியிடுதல், இரும்பு, வாகனத் தொழில், இரசாயனம், வழக்கறிஞர், மருத்துவர், கடல் கடந்த வியாபாரம், கட்டடம், கலைப்பொருள் விற்பனை போன்ற தொழில்கள் இவர்களுக்கு வெற்றியளிக்கும்.
சமூக விரோத சக்திகளை சந்தர்ப்பம் அறிந்து தட்டிக் கேட்பது நலம். இல்லையேல் வீண் பிரச்சினைக்கு உட்பட நேரிடும். எந்தத் தொழிலையும் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், ஒரு தொழிலை உறுதியாகப் பற்றுவதால் பொருளாதார ஏற்றம் காணலாம். சமுதாயக் காவலரான இவர்கள், மிகப் பெரிய காரியங்களைக் கூட மிக எளிதில் செய்ய வல்லவர்கள். மாந்திரிகம், பொருள் வரவழைத்தல், ரகசியங்களைத் தெரிந்துகொள்வது இவர்களின் பொழுதுபோக்கு. எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் நொடிகளில் பதில் அளிக்கும் இவர்கள், ஒரு தகவல் களஞ்சியம்தான்
N யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் அடுத்த பதிவில்
ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.
ஏனைய பதிவுகள்
கருத்துரையிடுக