வலைப்பதிவு பட்டியல்

பெயரின் முதல் எழுத்து - E
அடுத்தவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, தாராளமாக ஆலோசனைகளை அள்ளி வழங்கும் இவர்கள், அதிக சுதந்திரத்தை விரும்புவர். எதையும் உடனே கிரகித்துக்கொள்ளும் இவர்களின் எழுத்தில் சூரியக்கதிர்கள் படுவதால், எப்பொழுதும், சுறுசுறுப்பாக இருப்பர். தங்களைப் பற்றித் தாங்களே எதையாவது பெருமையாகவோ, தன்னடக்கம் உள்ளவர் போலவோ பேசிக்கொண்டிருப்பார்கள். மிகச் சீக்கிரமாக முன்னேறும் வழியைத் தேடுவதில் முனைப்பாக இருப்பர்.

எதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படும் இவர்கள் கோபப்படாமல் தான் எண்ணியதை செயலுக்குக் கொண்டுவந்துவிடும் திறமைசாலிகள்.  இவர்களுக்கு என்று ஒரு கூட்டமுண்டு. ஏதேனும் ஒரு காரியம் செய்து இவர்கள் பெயரை நிலைக்க வைத்துக்கொள்வர். பிறர் கைவிட்ட பல காரியங்களை சிரமேற்கொண்டு எடுத்துச்செய்து வெற்றியும் அடைந்துவிடுவர். நலிந்துபோன பல நிறுவனங்களை இவர்களிடம் நம்பி ஒப்படைக்கலாம்.

அடுத்தவரிடம் வேலை செய்வதை விட சொந்தத் தொழில் செய்து பெரும் பொருளீட்டவே விரும்புவர். இவர்களின் ஜாலமான பேச்சு வாடிக்கையாளர்களைக் கவரும். புதுப்புது யுக்திகளைக் கொண்டு வெற்றி பெறுவதால் சிலர் வலிய வந்து இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பயனடைவர். சில வேலைகளில் வெற்றி பெற இயலாதபோது மனம் நொந்து போவர். ஆயினும், சுதாரித்துக்கொண்டு மீண்டும் முயற்சிப்பார்கள்.  இவர்களைப் பார்த்தால் யாருக்கும் ஒரு சுறுசுறுப்புத் தொற்றிக்கொள்ளும்.

இவ்வகையில் இவர்கள் மானிடத் தேனீயாவர். நாட்டுநலனில் அக்கறை இல்லாதவர்களை ஓரங்கட்டிவிடுவர். இவர்களின் மனம் விக்ரமாதித்தனின் வேதாளம் போன்றது. ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தினால் இவர்கள் வெற்றியடைவதைத் தடுக்க முடியாது.

இவர்கள் திறமையை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுககு லாட்டரி அடித்ததுபோல்தான். தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் வெறுப்பர்.  பகல், இரவு பார்க்காமல் உழைக்கும் இவர்கள் உடம்பையும் பேணுவது நலம். காதலில் அதிக விருப்பமிருக்கும். எந்த ஊர், நாடு சென்றாலும் இவர்களுக்கு என்று ஒரு நட்பு வளையத்தைத் தக்கவைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எதையும் சிந்தித்துச் செயல்படும் இவர்கள் ரகசியங்களை மட்டும் பிறரிடம் கொட்டி விடுவர். அடுத்தவரை உற்சாகப்படுத்தி வாழ்வில் முன்னேறச் செய்வர்.

வயிறு அடிக்கடி சேஷ்டை செய்யும். மனமும், உடலும் எப்பொழுதும் பரபரப்பாக இயங்குவதால் உடம்பு உஷ்ணத்தால் குழப்பமடையலாம்.  இயல்பாகவே ஞானம் பெற்ற இவர்களின் முதல் எழுத்து, வாழ்வின் உச்சத்திற்கு இழுத்துச் செல்லும் என்பது உறுதி.

Aயுடன் இணைந்து வந்தால் நல்லது . நீங்கள் பிறருக்கும் பிறர் உங்களுக்கும் பரஸ்பர உதவி செய்து கொள்வீரகள்.

கலைத்துறையில் ஜொலிக்கும் வல்லமையுடைய இவர்களுக்கு ஞானமும், தியானமும், யோகமும் கைவந்த கலை. அடுக்குமாடி கட்டிடம் போல், புதுப்புதுத் திட்டங்களைத் தன் மனதில் அடுக்கி வைத்துக்கொண்டேயிருக்கும் இவர்களை ஒரு சரித்திரப் பெட்டகம் என்றே அழைக்கலாம். இவர்களால் நண்பர்கள் கூட்டம் நிறைய பலன் அடையும். ஏதேனும் ஒரு வழியில் எளிதில் மற்றவரைத் தன்வசப்படுத்திவிடும் இவர்கள், எல்லாரிடமும் வளைந்து கொடுத்துப் போகும் பக்குவமுடையவராவார்கள்.

F யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் அடுத்த பதிவில் 

 ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.  

ஏனைய பதிவுகள்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள பகிர்ந்துகொள்ளும்  சுட்டியை  அழுத்துவதன் மூலம் மேலும் பலர் இதை வாசிப்பதற்கு உதவுங்கள். நன்றி


0 கருத்துகள்