வலைப்பதிவு பட்டியல்

  • Irumbu Kuthirai - *Irumbu Kuthirai* (English: Iron Horse) is an action film written and directed by Yuvaraj Bose and produced by AGS Entertainment. The film stars Atharvaa, ...
    7 ஆண்டுகள் முன்பு
  • 23 Popular Emotional Smiley for Facebook - Previous post we looked at how to publish a blank status message. In this post we would like to share some of the commonly used smiley in Facebook. We incl...
    11 ஆண்டுகள் முன்பு


அவளிடம் மதி மயங்கு!
உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.
அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?

பெயரின் முதல் எழுத்து - F

பேச்சை விட செயல்திறன் அதிகம் கொண்டது இவ்வெழுத்து. பிடிவாதம், நிர்வாகத்திறன், உடல்வளம், துணிச்சலை இவ்வெழுத்துக் குறிக்கிறது. எங்கும் துணிச்சலுடன் சென்று காரியங்களை முடித்துக் கொள்பவர்கள் F எழுத்துக்காரர்கள். பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும், குழந்தை மனது இவர்களுக்கு.

பெயரின் முதல் எழுத்து - E
அடுத்தவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, தாராளமாக ஆலோசனைகளை அள்ளி வழங்கும் இவர்கள், அதிக சுதந்திரத்தை விரும்புவர். எதையும் உடனே கிரகித்துக்கொள்ளும் இவர்களின் எழுத்தில் சூரியக்கதிர்கள் படுவதால், எப்பொழுதும், சுறுசுறுப்பாக இருப்பர். தங்களைப் பற்றித் தாங்களே எதையாவது பெருமையாகவோ, தன்னடக்கம் உள்ளவர் போலவோ பேசிக்கொண்டிருப்பார்கள். மிகச் சீக்கிரமாக முன்னேறும் வழியைத் தேடுவதில் முனைப்பாக இருப்பர்.

எதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படும் இவர்கள் கோபப்படாமல் தான் எண்ணியதை செயலுக்குக் கொண்டுவந்துவிடும் திறமைசாலிகள்.  இவர்களுக்கு என்று ஒரு கூட்டமுண்டு. ஏதேனும் ஒரு காரியம் செய்து இவர்கள் பெயரை நிலைக்க வைத்துக்கொள்வர். பிறர் கைவிட்ட பல காரியங்களை சிரமேற்கொண்டு எடுத்துச்செய்து வெற்றியும் அடைந்துவிடுவர். நலிந்துபோன பல நிறுவனங்களை இவர்களிடம் நம்பி ஒப்படைக்கலாம்.

அடுத்தவரிடம் வேலை செய்வதை விட சொந்தத் தொழில் செய்து பெரும் பொருளீட்டவே விரும்புவர். இவர்களின் ஜாலமான பேச்சு வாடிக்கையாளர்களைக் கவரும். புதுப்புது யுக்திகளைக் கொண்டு வெற்றி பெறுவதால் சிலர் வலிய வந்து இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பயனடைவர். சில வேலைகளில் வெற்றி பெற இயலாதபோது மனம் நொந்து போவர். ஆயினும், சுதாரித்துக்கொண்டு மீண்டும் முயற்சிப்பார்கள்.  இவர்களைப் பார்த்தால் யாருக்கும் ஒரு சுறுசுறுப்புத் தொற்றிக்கொள்ளும்.

இவ்வகையில் இவர்கள் மானிடத் தேனீயாவர். நாட்டுநலனில் அக்கறை இல்லாதவர்களை ஓரங்கட்டிவிடுவர். இவர்களின் மனம் விக்ரமாதித்தனின் வேதாளம் போன்றது. ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தினால் இவர்கள் வெற்றியடைவதைத் தடுக்க முடியாது.

இவர்கள் திறமையை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுககு லாட்டரி அடித்ததுபோல்தான். தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் வெறுப்பர்.  பகல், இரவு பார்க்காமல் உழைக்கும் இவர்கள் உடம்பையும் பேணுவது நலம். காதலில் அதிக விருப்பமிருக்கும். எந்த ஊர், நாடு சென்றாலும் இவர்களுக்கு என்று ஒரு நட்பு வளையத்தைத் தக்கவைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எதையும் சிந்தித்துச் செயல்படும் இவர்கள் ரகசியங்களை மட்டும் பிறரிடம் கொட்டி விடுவர். அடுத்தவரை உற்சாகப்படுத்தி வாழ்வில் முன்னேறச் செய்வர்.

வயிறு அடிக்கடி சேஷ்டை செய்யும். மனமும், உடலும் எப்பொழுதும் பரபரப்பாக இயங்குவதால் உடம்பு உஷ்ணத்தால் குழப்பமடையலாம்.  இயல்பாகவே ஞானம் பெற்ற இவர்களின் முதல் எழுத்து, வாழ்வின் உச்சத்திற்கு இழுத்துச் செல்லும் என்பது உறுதி.

Aயுடன் இணைந்து வந்தால் நல்லது . நீங்கள் பிறருக்கும் பிறர் உங்களுக்கும் பரஸ்பர உதவி செய்து கொள்வீரகள்.

கலைத்துறையில் ஜொலிக்கும் வல்லமையுடைய இவர்களுக்கு ஞானமும், தியானமும், யோகமும் கைவந்த கலை. அடுக்குமாடி கட்டிடம் போல், புதுப்புதுத் திட்டங்களைத் தன் மனதில் அடுக்கி வைத்துக்கொண்டேயிருக்கும் இவர்களை ஒரு சரித்திரப் பெட்டகம் என்றே அழைக்கலாம். இவர்களால் நண்பர்கள் கூட்டம் நிறைய பலன் அடையும். ஏதேனும் ஒரு வழியில் எளிதில் மற்றவரைத் தன்வசப்படுத்திவிடும் இவர்கள், எல்லாரிடமும் வளைந்து கொடுத்துப் போகும் பக்குவமுடையவராவார்கள்.

F யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் அடுத்த பதிவில் 

 ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.  

ஏனைய பதிவுகள்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள பகிர்ந்துகொள்ளும்  சுட்டியை  அழுத்துவதன் மூலம் மேலும் பலர் இதை வாசிப்பதற்கு உதவுங்கள். நன்றி


Name starting with letter 'D'


D என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள் ராஜதந்திரத்துடன் செயல்படுவார்கள். ஆற்றல்மிக்க  பேச்சால் பலதரப்பு மக்களின் நட்பையும் பெறுவார்கள். அதேவேளை, எதிர்ப்பையும் அதிகமாகவே சம்பாதிப்பார்கள். குடல், கண், தொடர்பான நோய்கள், மூட்டுவலி, பித்தம் போன்றவற்றால் அவ்வப்போது அவதிப்படுவார்கள்.

Name starting with letter 'C'
B யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்த்தோம்.


C என்ற ஆங்கில எழுத்தைத் தங்கள் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் சீரும், சிறப்பும், பக்தியும் கொண்டு விளங்குவர். சூரியக்கதிர்கள் இவ்வெழுத்தில் பட்டு கிரகித்து பெயரின் மற்ற எழுத்துகளுக்கும் சக்தியைத் தருவதால் எங்கும் பிரபலமாக ஜொலிப்பர்.

Name starting with letter 'B'    
பெயரின் முதல் எழுத்து - B

இனி  பெயரின் முதல் எழுத்தாக B எழுத்தைக் கொண்டவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் எனப் பார்க்கலாம். சூரியனின் கதிர்கள் இந்த எழுத்தின் மீது பட்டுச் சிதறுவதால் இவர்களின் உடலுக்குப் போதுமான உஷ்ணம் கிடைப்பதில்லை. ஆனால் அன்புடன் நடவடிக்கைகளைத் துவங்கும் இவர்களின் உள்மனதை ஆண்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.


பேச்சில் அன்பைப் பிசைந்து கொடுப்பதால் இவர்களைத் திரும்பத் திரும்பச் சந்திக்க வேண்டும் போலிருக்கும். மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்களாக இருப்பார்கள். வாயுவேகம், மனோவேகம் என்பார்களே... அது இவர்களுக்குத்தான் பொருந்தும். நொடியில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா  வரை பேச்சிலேயே சென்று வந்து விடுவர். கற்பனைக் கடலான இவர்கள் அடிக்கடி நீர் சம்பந்தமான சின்ன நோய்களால் அவதியுறுவர். இவர்கள் மனதைப் போலவே உடலும் குளிர்வானதாகவே இருக்கும்.

பெண் தெய்வத்தின் பேரில் அதிக நாட்டம் உண்டு. நாஸ்டர்டாமுக்கு நெருங்கிய உறவினர் போல், பின்னர் நடப்பவற்றை முன்பே கூறிவிடுவர். பல கலைகளை அறிந்தவர்கள். இதில் காதலும் ஒன்று. வெள்ளை ஆடைகளை விரும்பி அணிவர். குளிர்பானங்கள், புளிப்புச் சுவைகளை விரும்புவர்.

திட்டமிட்டு செயலாற்றுதல், நேர்மை, ஆன்மீகம், சமாதானம் ஆகியவற்றை இவ்வெழுத்துக்குறிக்கும். இந்த எழுத்து முதலெழுத்தாக வருவது நல்லது.

உடல் உழைப்பை விரும்பாத இவர்கள், அறிவுபூர்வமான விஷயங்களை எப்பொழுதும் அலசிக்கொண்டேயிருப்பர். மிக மென்மையாகப் பேசி யாரையும் தன்வசம் கொண்டு வந்து விடுவர். தண்ணீர் கலந்த உணவு நிரம்பப் பிடிக்கும். உஷ்ணமானவற்றை உதறித் தள்ளி விடுவர். செயலாற்றத் திட்டமிடுவர். ஆனால் செயல் புரிய சோம்பேறித்தனப்படுவர். இதனால் இவர்களின் பல வேலைகள் பாதியிலேயே நிற்கும். பெரும்பாலும் நிழல் இருக்கும் இடத்தில் மட்டுமே தன் கருத்தை வெளியிடுவர். பகல்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மாலையிலிருந்து சிந்தனைச் சிற்பிகளாகி விடுவர்.

அடக்கத்துடன் நடந்துகொள்ளும் இவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்கள். விண்வெளி போன்று பரந்த மனப்பாங்கு உடையவர்கள். எந்த ஒரு தீய செயலுக்கும் பழக்கப்படாமல் இருப்பதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இவர்களை வையகம் போற்றும்.

 ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.  

ஏனைய பதிவுகள்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள பகிர்ந்துகொள்ளும்  சுட்டியை  அழுத்துவதன் மூலம் மேலும் பலர் இதை வாசிப்பதற்கு உதவுங்கள். நன்றி




உலகிலுள்ள அழகான புத்தக சாலைகள் 


இணையத்தில் இலகுவில் புத்தகங்களை வாங்ககூடியதாக இருக்கும் போது புத்தக சாலைகளுக்கு ஏன் போகவேண்டும் என்கிறீர்களா? நீங்கள் புத்தக பிரியராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த படங்களை பாருங்கள். புத்தகங்களை வாங்காவிட்டாலும் பரவாயில்லை. இவற்றை பார்க்கவாவது ஒருமுறை போக வேண்டும் என்று தோன்றுகிறதா?



Selexyz Bookstore, Maastricht, Holland
























The Bookàbar Bookshop, Rome, Italy



 Barter Books, Alnwick, UK


Cook & Book, Brussels, Belgium


Librería El Ateneo Grand Splendid, Buenos Aires, Argentina


The Last Bookstore, Los Angeles, CA


Livraria Lello, Porto, Portugal


Cafebreria El Pendulo, Mexico City, Mexico


Plural Bookshop, Bratislava, Slovakia




 Poplar Kid’s Republic, Beijing, China



Livraria da Vila, Sao Paulo, Brazil


உங்களுக்கு பிடிக்கக்கூடிய இன்னும் சில பதிவுகள்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள பகிர்ந்துகொள்ளும்  சுட்டியை  அழுத்துவதன் மூலம் மேலும் பலர் இதை வாசிப்பதற்கு உதவுங்கள். நன்றி.

பெயரின் முதல் எழுத்து - A

 முதலில் பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தால் அவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.




உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன என்பதிலிருந்து உங்களுடைய பொதுவான குணங்களை அறியலாம். ஒருவரின் வெற்றிக்கு மிக அதிகமாக உதவுவது பெயரின் முதல் எழுத்து. நாம் ஒரு வாகனத்தைச் செலுத்தும்போது அதன் முன் சக்கரம் எந்த இலக்கை நோக்கிச் செல்கிறதோ அதனைத் தொடர்ந்துதான் பின் சக்கரமும் செல்கிறது. அதுபோல் பெயரின் முதல் எழுத்து அதற்கு அடுத்து வரும் அனைத்து எழுத்துக்களுக்கும் சக்தியைத் தருகிறது.







தபு ஷங்கரின் தேவதைகளின் தேவதை 
நன்றி - ஆனந்தவிகடன் 


தேவதைகளின் தேவதை 01 - தபு ஷங்கர்