வலைப்பதிவு பட்டியல்

  • Irumbu Kuthirai - *Irumbu Kuthirai* (English: Iron Horse) is an action film written and directed by Yuvaraj Bose and produced by AGS Entertainment. The film stars Atharvaa, ...
    7 ஆண்டுகள் முன்பு
  • 23 Popular Emotional Smiley for Facebook - Previous post we looked at how to publish a blank status message. In this post we would like to share some of the commonly used smiley in Facebook. We incl...
    11 ஆண்டுகள் முன்பு

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்.  சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. 

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும். 

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.


அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.


காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:




யோ                     -எவர்
ந                           -நம்முடைய

தத்                        -அப்படிப்பட்ட
தியோ                 -புத்தியை
ப்ரசோதயாத்    -தூண்டுகிறாரோ
தேவஸ்ய          -ஒளிமிக்கவராக
ஸவிது               -உலகைப் படைத்த
வரேண்யம்        -மிகவும் உயர்ந்ததான
பர்கோ                  -சக்தியை
தீமஹி                -தியானிக்கிறோம்



நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இந்த மந்திரம் நிகழ்காலச் செயலாக இயற்றப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்சூரியனுடைய  ஒளியை தியானிக்கின்றோம் என்பதால் கண்களை மூடிய நிலையில் சூரிய ஒளியில் நின்று இதைச் சொல்ல வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம்இமைகளின் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளி அளவே ஹார்மோன்களைச் சமன் படுத்தப் போதுமானது.