- உங்களுக்கான லட்சியம் ஒன்றை உருவாக்குங்கள். அவை குறுகிய கால லட்சியங்களாகவும் இருக்கலாம். அதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள். அந்த நினைவூட்டல் உங்களை வழிநடத்திக் கொண்டே இருக்கும்.
- அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த எதையும் செய்ய ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்குச் சரி எனப்படுவது சரியாக இருந்தால், தயங்காமல் அதைச் செய்யுங்கள். தவறு என உணர்ந்தால் நிறுத்துங்கள். எல்லோரும் படகு வாங்குகிறார்கள் என்று படகு வாங்கி ரோட்டில் நிறுத்துவது பயனளிக்காது.
- 'தம் அடிப்பதை நிறுத்த வேண்டும்' என பிடிவாதமாக முயன்றாலும், முடியவில்லையா? கவலை வேண்டாம். உங்கள் முயற்சியில் தொடர்ந்து பிடிவாதமாக, நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி உங்களுக்கே!
- உங்கள் திறமைகளை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். 'நான் குட்!' என்று உங்களுக்கு நீங்களே மரியாதை செய்யுங்கள். நல்ல திருத்தமான ஆடைகள் அணியுங்கள். இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
- எதை நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்களோ, அதுவாகவே மாறிவிடுவீர்கள். எனவே, உங்களுடைய இயலாமைகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்துங்கள். நல்ல பாஸிட்டிவ் விஷயங்களைச் சிந்தியுங்கள்.
- தவறுகள், தோல்விகள்... இவற்றையெல்லாம் அனுபவங்களாகக் கொள்ளுங்கள். தவறே செய்யாமலும், தோல்வியே இல்லாமலும் யாரும் இல்லை என்பதை உணருங்கள். 'இட்ஸ் ஆல் இன் த கேம்...' என்று அவற்றை அந்த நிமிடமே உதறிவிட்டு, அடுத்த வேலையை ஆரம்பியுங்கள்.
- 'நான் ஸ்லிம்மா இல்லையே...', 'எனக்கு லாங் ஹேர் இல்லையே...' போன்ற உங்களின் பர்சனாலிட்டி பற்றிய நெகட்டிவ் எண்ணங்களைத் தூக்கி தூரப் போடுங்கள். 'அழகு என்பது முகம் அல்ல... அகம்' என்பதை உணருங்கள்! மனதளவில் அழகி, அழகனாகுங்கள்!
- உங்களுக்குத் திறமை, ஆர்வம் இருக்கும் ஏரியாவைக் கண்டறிந்து அதை டெவலப் செய்யுங்கள். அப்போது உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் அசாத்திய பலம் தெரிய வரலாம். இது உங்களுக்கு அதீத தன்னம்பிக்கை தரும்.
- வகுப்பறை, வேலைத் தளம், நண்பர் கூட்டம், குழுக்கள் என்று எங்கேயானாலும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். எதுவும் சொல்லாமல் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானது, உங்கள் கருத்தைச் சொல்வது. கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இல்லாவிட்டாலும் கவலையில்லை, 'நம் கருத்தைச் சொல்லும் தைரியம் நமக்கு இருந்தது' என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
வலைப்பதிவு பட்டியல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக