வலைப்பதிவு பட்டியல்

பெயரின் முதல் எழுத்து - G

பெயரில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இவ்வெழுத்து வரலாம். பொறுமை, சகிப்புத்தன்மை, சாமர்த்தியம், சத்தியம் இவற்றைக் குறிக்கும் எழுத்து இது. நோய்நொடிகள் விரைவில் குணமாகும். தன்னம்பிக்கை நிறைய உண்டு. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். தீர்க்கதரிசிகள். திட்டமிட்டு செயலாற்றுவதில் நிபுணர்கள். புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள்.


ஊக்கமும், உழைப்பும், கடுமையான கட்டுப்பாடுகளும், அடக்கமும், பிறரிடம் மரியாதையும் தனக்கு மரியாதை தர வேண்டுமென எதிர்பார்ப்பும், நாணயமும், நல்லியதமும், நியாயமும், சிக்கனமும், படாடோபத்தை விரும்பாத குணமும் கொண்டவர்கள் G எழுத்துக்காரர்கள். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர்கள், தன் சொத்துகளைப் பிறருக்கு அளிப்பதில் அளவுகோல் ஒன்றை வைத்துக்கொள்வர். ஆனால், பிறரை நிறைய தர்மம் செய்யுங்களேன் எனப் பிறருக்கு அறிவுரை சொல்வார்கள்.

ஒரு காரியத்தைத் துவங்கிவிட்டால், முடிக்காமல் விடமாட்டார்கள். இடைவிடாத முயற்சி உடையவர்கள். பல நற்குணங்களால் உயர்பதவிகள் இவர்களைத் தேடி வரும். எந்தப் பதவியில் இருந்தாலும் உயரதிகாரிகளுக்குத் கட்டுப்பட்டுப் பணியாற்றுவர். தொழில் தர்மம் தவறமாட்டார்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லமாட்டார்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லமாட்டார்கள். தேசநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வர். இளவயதிலேயே பல நற்காரியங்களைச் செய்து புத்திசாலி எனப் பெயர் பெறுவர். படிப்பிலும் கெட்டிக்காரர்தான்.

கண்களில் காந்த சக்தியுடையவர்கள். புதிய பல விஷயங்களை உலகிற்குத் தருவர். பின்னால் நடக்கப்போகும் பல நிகழ்வுகளை சரரியாக யூகித்துச்; சொல்வர். சொன்னது நடக்கும். எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்து நற்பெயர் எடுப்பர். உணவுக் கட்டுப்பாடு மிகுந்த இவர்கள் இனிப்பு, பருப்பு வகை, நெய் கலந்த சைவ உணவையே அதிகம் விரும்புவர். நடக்காது எனத் தெரிந்தும் சில விஷயங்களில் அபரிமிதமான தன்னம்பிக்கை வைப்பது இவர்களின் பலவீனம். இதனால் சில நிகழ்வுகள் தோல்விப் பாதைக்கு இழுத்துச் செல்லலாம். இவர்கள் யாரையும் நம்புவது இல்லை. சரித்திர கால இடங்கள், மன்னர்கள், பெரியோர்களை சந்திப்பதில் அதிக விருப்பமுடையவர்கள்.

உயர்ந்த தோற்றம், களையான முகம், நிமிர்ந்த நடை உடையவர்கள். பணக்காரராக இருப்பாரோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு வெளித்தோற்றம் கொண்டவர்கள். தன் செல்வாக்கைக் குறைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் இறங்கமாட்டார்கள். பேச்சால் கவர முடியாதவரிடம் மீண்டும் பேசமாட்டார்கள். வியாபாரியாக இருந்தால் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும் அளவிற்குத்தான் தரகு பெறுவர். அசையாத் தொழில் பெரும் செல்வம் தரும்.

கல்வி நிறுவனத்திலும், ஆன்மிகத் துறையிலும் வங்கிகளிலும் வேலை கிடைத்து, நற்பெயரும், புகழும், பொருளாதார ஏற்றமும் பெறுவர். லட்சியவாதிகளாக விளங்கும் இவர்கள் F,Q,P ஆகிய முதல் எழுத்தைப் பெற்றவர்களிடமும் 6 எண் வரும் நாட்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

H யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் அடுத்த பதிவில் 

 ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.  

ஏனைய பதிவுகள்

0 கருத்துகள்