வலைப்பதிவு பட்டியல்

பெயரின் முதல் எழுத்து - J 



சிறந்த நிர்வாகத் திறமை, நல் எண்ணம், எதிரிகளை பந்தாடும் குணம், எதிலும்  நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், பின்வாங்காத தீரமும், கடமையை கண்ணியத்துடன் செய்யும் பக்குவம் ஆகிய பண்புகளுக்கு சொந்தக்காரர்கள் J யில் பெயர் துவங்குபவர்கள்.

கம்ப்யூட்டர் போன்ற நுண்ணிய துறைகளில் அறிவு அதிகம்.  எதையும் இலக்கு வைத்து அடைவதி விடாமுயற்சி உடையவர்கள்.  சுயகவுரவத்திற்காக எதையும் தாங்கும் இதயம் உடைய இவர்களது எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு, இடப்புறம் அதிகமாக சிதறுவதால், மனதில் போட்ட திட்டங்கள், முடியும் நேரத்தில் மனநெருடலை தருவதாக இருக்கும்.

எழுத்தாளர்களை குறிப்பது இந்த எழுத்து. கலைஞர்களையும்,வியாபாரிகளையும் கூட இது குறிப்பிடுகிறது. தனக்கென ஒருதனிப்பாணி, பயணங்களில் நாட்டம், சலனபுத்தி இரட்டைமனம் ஆகியகுணங்களை கொள்வீர்கள். புது புது சிநேகங்களில் நாட்டம் கொள்வீர்கள். புதிய கருத்துக்களை ஈர்த்து கொள்வீர்கள். சலனத்தால் கவனம் சிதற வாய்ப்புண்டு. உலகநடப்புகளை உடனுக்குடன் அறீவீர்கள். மொத்தத்தில் திறமைசாலிகள். 

மகிமை பொருந்திய பூமியின் மேல் உள்ள கடல்நீர் மற்ற கிரகங்களின் மேல் ஊற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு, பூமியின் ஆகர்ஷண சக்தியே காரணம் ஆகும்.  இதுபோல் இவர்கள் மேல் பற்று வைத்தவர்கள் வேறு யார் பக்கமும் சாயமாட்டார்கள்.  எதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் பக்குவம் இவர்களை மாபெரும் ஆற்றல் மிகுந்தவர்களாக வெளிப்படுத்தும்.

தவறு செய்தவர்களை கண்டிப்பதில் யானையைப் போன்றவர்கள்.  சிறப்பான வாழ்க்கை, கம்பீரம், சுதந்திரத்தன்மை போன்றவற்றை அடி பிறழாமல் காப்பாற்றுவார். அரசாங்கப் பதவிகளும், அரசியல் பதவிகளும் விடாமல் துரத்தி வந்து இவர்களை அலங்கரிக்கும்.  பிறர் செய்தது தவறு என்று தெரிந்துவிட்டால் போதும்.  தண்டனையை உடனே நிறைவேற்றிவிடுவர்.

தவறு செய்தவர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டு, "நீங்கள்தான் என் தெய்வம், மன்னித்து என்னை நல்வழிப்படுத்துங்கள்" என்றால் போது குழந்தையாகிவிடுவர்.  எதிரிகள் இந்த குணாதிசயத்தை பயன்படுத்தி இவர்களை மாட்டிவிட வாய்ப்புண்டு.  கவனம், நுண்ணிய அறிவு படைத்த இவர்கள், அரிதான விஷயங்களை மிக எளிதாக புரிந்து கொள்வர்.  யூக அடிப்படையிலான ஜோதிடம், சாஸ்திரம், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஈடுபட்டால் பெரும் பணமும், புகழும் அடைவர்.

பேச்சுத்திறமை, எழுத்தாற்றல் மிக்கவர்களின் நட்பை பயன்படுத்தி வி.ஐ.பி.க்கள் ஆகிவிடுவர்.  வியாபாரத்தில் உள்ளவர்கள் நேர்மையாளர்களாக இருப்பர்.  இதனால் வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவர்ந்து, கோடிகளை அடைந்து உச்சத்தில் இருப்பர்.

வாழ்வில் முதல் பகுதியில் நினைத்துப் பாராத அளவிற்கு புகழ் அடைவர்.  பிற்பகுதியில் பணம் குவியும்.  பொது காரியங்களில் அதிகம் ஈடுபடுவதால் பணத்தால் எந்த டென்ஷனும் இவர்களுக்கு வருவதில்லை.

படாடோபமான வாழ்க்கையில் மிகுந்த விருப்பமுடைய இவர்கள், சுற்றுலா விரும்பிகளாவர்.  நிறைய நண்பர்கள் இருந்தாலும் நெருக்கமாக யாரையும் வைத்துக்கொள்வதில்லை. மாபெரும் நிறுவனங்களின் பொறுப்பு இவர்களை வந்தடையும், அரசின் உயர்பதவிகளில் பதவி பெற வாய்ய்புண்டு. இந்த பெயரைக்கொண்டவர்கள் 2,6 ஆம் தேதி பிறந்திருந்தால் அவமரியாதை ஏற்படும்.

உஷ்ணம், காரம், உப்பு மிகவும் ருசித்து உண்பர்.  சிறிதளவு சாப்பிட்டாலும் சிறப்பாக உண்ண வேண்டும் என்பர்.  அழகை ரசிக்கும் இவர்களுக்கு வாழ்க்கைத் துணையும் அழகாகவே அமையும்.  ஆனாலும் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டியாகவே இருப்பர்.

பகலில் நடப்பவை, சூரிய சக்தியால் இயங்குபவை, உஷ்ணம் சார்ந்தவை, ஏற்றுமதி, இறக்குமதி கமிஷன், கல்வி நிறுவனம் போன்ற தொழில்கள் இவர்களின் பெரும் வெற்றிக்கு வித்திடும். எங்கு சென்றாலும் தனித்துவம் வாய்ந்த இவர்கள், பிறரின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் வெற்றிக்கொடி நாட்டலாம்.



K யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் அடுத்த பதிவில் 

 ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.  

ஏனைய பதிவுகள்

0 கருத்துகள்