நாம் அனுபவிக்கும் அனைத்துப் பொருட்களும் இந்த பூமியிலிருந்து தான் விளைகின்றன. சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் உருண்டையாகத்தான் உள்ளன. வேற்றுக் கிரகத்திலிருந்து எந்தப் பொருட்கள் வந்தாலும் அடுத்த கிரகம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இது இயற்கை நியதி. தானுண்டு, தன் வேலை உண்டு, யாரையும் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை, பிறர் தொந்தரவையும் ஏற்பதில்லை என்றிருக்கும் `O' என்ற எழுத்தில் சூரியக்கதிர்கள் முற்றிலுமாக உட்புக முடியாமல் இருப்பதால் இவ்வெழுத்தில் உள்ளவர்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் முற்றிலுமாக மாறுபாடான குணாதிசயத்தைப் பெற்றவர்களாக இருப்பர்.
ஆன்மீகத் தென்றலான இவர்கள் மாபெரும் ஆராய்ச்சியாளர்கள். மந்திரம், தந்திரம், சூட்சும சக்தி, மனவசியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடுடையவர்கள். சாஸ்திர, சம்பிரதாயங்களில் மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நீதியை நிலைநாட்டுவதில் முனைப்பாக இருப்பர். இவ்வுலகத்தில் நடக்கும் அதர்மங்களை நினைத்துக் கண்ணீர் விடுவர். கானகங்களில் குடியிருக்க விரும்புவர். இருப்பினும் சோம, சுராபானங்களில் மூழ்கிவிடுவர் (போதை வஸ்துக்கள்). 50 வயதிற்கு மேல் உலக விடயங்கள் பொய்யானவை, எதுவும் நிலையற்றது என்று புலம்புவர். ஞான வழியைப் பின்பற்றுவர். சென்ற பிறவியில் என்ன நடந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற விடயங்களை இவர்கள் மனம் அடிக்கடி அறிவித்துக்கொண்டேயிருக்கும். மனிதர்கள் மனத்திற்கு மாறுபட்ட விடயங்களை அலசுவதும், மாற்று கிரகங்கள் எப்படி இருக்கும், அதில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்பது பற்றியும் அனுதினமும் பேசுவர். ஆடைகள் அணிவதில் அன்னம் போன்று பிரகாசிப்பர். கண்களில் தெய்வீகம் தெரியும். மத விடயங்களில் மாபெரும் ஈடுபாடு உண்டு.
உயிர்ப்பலி வேண்டாமென்பர். கடல் கடந்து சென்று ஊதியம் பெறும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் அமைதியுடன் காணப்படும் இவர்கள், தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பிவிடும் குணமும் கொண்டவர்கள். கேட்டால் தத்துவம் என்பர். புலன் அடக்கம் இவர்களுக்கு அதிகம் உண்டு என்றாலும், காதல் தோல்விகளின் கதாநாயகர்களும் இவர்களே. கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். இவர்கள் பேச்சில் மயங்கும் மனிதர்கள் ஒரு கூட்டமாக தினசரி கூடுவர். இவர்களின் கருத்தை கேட்டவண்ணமிருப்பர். கற்பனைக் கடலான இவர்கள் வாழ்வே மாயம் என்பர். மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் இவர்கள் உலகப் புகழ் பெறும் வாய்ப்புகள் உண்டு. எதைச் சொன்னாலும் மக்கள் கேட்டுக்கொள்வர் என்பதால், தேவையற்ற (உலகிற்கு) கருத்துகளைக் கூறுவதை விட்டு விடுவது அனைவருக்கும் நலம். இவர்களின் பல கருத்துகள் தண்ணீரில் எழுத்துப் போன்றவையே.
இவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் சக்தி குறைவாக இருக்கும். இதைத் தவிர்க்க தூய்மையான இடங்களில் வசிப்பதும், உணவு அருந்துவதும் மிக முக்கியம். பயணக் கட்டுரை எழுதுவதில் வல்லவர். பொருள் வரவு - பல தடைகளைக் கடந்து வரும். வர ஆரம்பித்தால் அவ்வளவுதான். யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. மனோ தைரியம் அவசியம் வேண்டும். வாழ்வில் மாபெரும் நன்மைகளை இவர்களுக்கு மனமுவந்து செய்பவர்கள் R,K,B என்ற எழுத்துகளில் ஒன்றைப் பெயரின் முதல் எழுத்தாக உடையவர்களே ஆவர்.
இவர்களுக்கு சினிமா, கவிதை, புத்தகம் எழுதுவதாலும், விவசாயம், பால் பண்ணை, காகித ஆலை, இலத்திரனியல், வானசாஸ்திரம் போன்றவையும் பெரும் பொருள் தரும். நட்புக்கு விசுவாசமாக இருப்பார்கள். பிறர் கூறிக்கொள்ளும் அளவிற்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டுவர். அடுத்தவர் கருத்தை அன்புடன் கேட்பர். தனக்கு ஒத்துவராத காரியங்களில் இறங்கமாட்டார்கள். திடீர் அதிர்ஷ்டத்தில் அறவே நம்பிக்கை இல்லாதவர். அடிக்கடி வாகனங்களை மாற்றிக் கொள்வர். தலைவலி, தோல்நோய், மூட்டுவலி, வயிறு சம்பந்தமானவற்றை ஒடுக்கி மனச்சோர்வை விட்டு, உணவுக் கட்டுப்பாட்டிற்கு வந்தால் போதும்.
மதப்பற்று அதிகம் உள்ள இவர்கள் மாற்று மதத்தினரையும் மனிதர்களாகக் கருதுவது மாபெரும் மாண்பாகும். குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குதூகலமாக வையத்துள் வாழ்வாங்கு வாழ இறை நம்பிக்கை கைகொடுக்கும். `O' வில் பெயர் அமைந்தோர் கூறும் கருத்துக்கள் நன்மையளிக்கும்.
ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.
ஏனைய பதிவுகள்
கருத்துரையிடுக