“Treat your password like your toothbrush. Don’t let anybody else use it, and get a new one every six months” – Clifford Stoll
இன்றைய அவசர யுகத்தில் எதுக்குமே யோசிக்க நேரம் இருப்பதில்லை. கம்ப்யூட்டர், ஆன்லைன் பரிவர்த்தனைகள் என அனைத்துக்கும் பாஸ்வேர்டு இருக்கிறது. இந்த பாஸ்வேர்டுகள் பெரும்பாலும் பெயர், காதலியின் பெயர், திருமணம் ஆகிவிட்டால் மனைவி, குழந்தைகள் பெயர், பிறந்த தேதி அல்லது கம்ப்யூட்டர் கீ-போர்டில் இருக்கும் வரிசையான எண்கள், மானிட்டரில் இருக்கும் எழுத்துக்கள் என பெரும்பாலான நபர்களின் பாஸ்வேர்டுகளாக இருக்கின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்வேர்டை ஏனோ தானோ என வைத்துக் கொள்ளவதினால் சைபர் கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாக போய்விடுகிறது. சுலபமாக கணித்து கொள்ளையர்கள் பணத்தை திருடுவதற்கு நாமே வழி வகுத்துக் கொடுப்பதாக தான் பலரும் சுலபமான பாஸ்வேர்டை பயன்படுத்துகிறோம்.
இன்னும் சொல்லப்போனால் வங்கி ஏ.டி.எம். கார்டு செயல்படுத்த கொடுத்த முதல் பாஸ்வேர்டையே இன்னும் மாற்றாமல் வைத்திருப்பவர்கள் ஏராளம். பணத்தை முன்பு கையில் எடுத்துச் செல்லும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தோமோ அதே போல் நவீனமயமானதும் வங்கி பார்த்துக் கொள்ளும் என இருக்காமல் நம்மால் முடிந்தளவிற்கு பாதுகாப்பாக இருப்பது நமது பணத்திற்கு பாதுகாப்பு.
இப்படி உலகெங்கும் பாஸ்வேர்டு பயன்படுத்துவர்கள் இந்த 2011-ம் ஆண்டில் உபயோகப்படுத்திய மோசமான பாஸ்வேர்டுகளை பட்டியலிட்டிருக்கிறது ஸ்பிளாஷ் டேட்டா எனும் கணினி செக்யூரிட்டி நிறுவனம். அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த மோசமான பாஸ்வேர்டுகளின் வரிசை இதோ.
1. password
2. 123456
3. 12345678
4. qwerty
5. abc123
6. monkey
7. 1234567
8. letmein
9. trustno1
10. dragon
மறந்துவிடும் என்பதால் சுலபமான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது, எழுதி வைத்துக் கொள்வது, செல்போனில் குறித்து வைத்துக் கொள்வது, பொது இடங்களில் சத்தமாக போனிலோ, நேரிலோ பாஸ்வேர்டை மற்றவர்களிடம் சொல்வது போன்றவற்றை தவிர்க்கவும். அடுத்தவர்கள் யூகிக்க முடியாத அதே நேரத்தில் நமக்கும் ஞாபகத்திற்கு இருக்கும் வகையில் பாஸ்வேர்டை உபயோகித்து கொள்ளவும்.
இணைய தளங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி
இணைய தளங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி