கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களில் 85 சதவீதம் பேர் தாங்கள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மிகச்சரியாக கடைபிடிப்பதாக நினைக்கின்றனர். ஆனால் 2 சதவீதம் பேர் தான் இந்த விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனர் என்று சமீபத்திய ஆப்தோமெட்ரி அன்டு விஷன் சயின்ஸ் ஜர்னல் கூறுகிறது. தினந்தோறும் 2500க்கு ஒருவர் என்ற அளவில் லென்ஸ் சரியாக பராமரிக்காததால் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்றும் அது கூறுகிறது.
லென்ஸ் அணிவதால் பிரச்னை வராமல் இருக்க ஆறு வழிமுறைகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
1. லென்ஸ் அணிந்துகொண்டே தூங்க கூடாது.
2. குறித்த காலத்திற்குள் லென்சை மாற்றிக்கொள்ள வேண்டும்.
3. கைகளைக் கழுவாமல் லென்சை தொடக்கூடாது.
4. தினந்தோறும் பிரஷ் சொல்யூஷன் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே உங்கள் லென்ஸ் கேஸில் உள்ள சொல்யூஷனை பயன்படுத்தக்கூடாது.
5. லென்ஸை தண்ணீரில் போடக்கூடாது. அதில் உள்ள பாக்டீரியா, அமிபா லென்ஸில் ஒட்டிக்கொண்டு கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
6. லென்ஸ் கேஸை குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றிவிட வேண்டும்.
இதை பின்பற்றினாலே கண்ணில் தொற்றுவராமல், பிரச்னை வராமல் தடுக்கலாம்.
(நன்றி டாக்டர் விகடன்)