வலைப்பதிவு பட்டியல்

  • Irumbu Kuthirai - *Irumbu Kuthirai* (English: Iron Horse) is an action film written and directed by Yuvaraj Bose and produced by AGS Entertainment. The film stars Atharvaa, ...
    7 ஆண்டுகள் முன்பு
  • 23 Popular Emotional Smiley for Facebook - Previous post we looked at how to publish a blank status message. In this post we would like to share some of the commonly used smiley in Facebook. We incl...
    11 ஆண்டுகள் முன்பு

 மன அழுத்த சிம்ப்டம்ஸ்!      
 
  •  மிகவும் கவலையாக, கோபமாக, எரிச்சலாக இருக்கிறதா? இந்த உணர்வுகள் பல மணி நேரம் நீடிக்கிறதா?
  •  உலக மஹா ஜோக் சொன்னால்கூட, சிரிப்பு வரவில்லையா... நண்பர்களின் உற்சாக அரட்டை சலனப்படுத்தவில்லையா... சிரிக்க வேண்டுமென்று முயற்சிகூட செய்யத் தோன்றவில்லையா?
  •  உங்களைப் பற்றி உங்களுக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா? 'நான் ஒரு உதவாக்கரை, யாருக்கும் தேவையற்றவன், என்னால் என்ன பயன் இருக்கப் போகிறது..?' என்றெல்லாம் சிந்தனை ஓடுகிறதா?
  •  திடீர் திடீரென தலைவலி வருகிறதா? உடல் வலி வருகிறதா? காரணமே இல்லாமல் சோர்வாக இருக்கிறதா?
  •  அவ்வப்போது அழுகை வருகிறதா... யாராவது சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள்கூட அழுகையை மேலும் கிளறுகிறதா... சும்மாவாச்சும் உட்கார்ந்து அழ வேண்டுமென்று தோன்றுகிறதா?
  •  திடீரென உடல் எடை அதிகரிக்கிறதா... அல்லது டயட் இருக்காமலேயே உடல் எடை சட சடவென குறைகிறதா?
  •  எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறதா... ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே பாதியில் மறந்து போய்விடுகிறதா... படிப்பு எல்லாம் 'சர்'ரென கீழே இறங்குகிறதா?
  •  'யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை' என தோன்றுகிறதா... 'என்ன செய்தாலும் இனி என்னால் கரையேற முடியாது' என்று தோன்றுகிறதா?
  •  தூக்கம் எட்டாக்கனியாகி தொந்தரவு செய்கிறதா? அல்லது அதீத தூக்க மயக்கமாகவே இருக்கிறதா?
  •  மரணம் அடிக்கடி சிந்தனையில் வருகிறதா? தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறதா?

    - மேற்சொன்னவை எல்லாம் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள். பதற வேண்டாம். வழி இருக்கிறது. வாழ்க்கை அழகானது! மேலே படியுங்கள்!
     'ஸ்ட்ரெஸ்'-ஐ சிம்பிளா விரட்டலாம்!




  •  'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்போது செய்ய வேண்டிய முதல் காரியம், வீட்டாரிடம் (பெற்றோர், கணவன் மனைவி ) உங்களின் நிலையை விளக்கிவிடுவதுதான்.
  • ஆத்மார்த்த நேசம் கொண்டவர்களுடனான உரையாடல், மன அழுத்தங்களை விலக்கிவிடும். 'அம்மா, அப்பா என்ன நினைப்பாங்க..? மனைவி என்னை புரிஞ்சுப்பாங்களா..?' என்றெல்லாம் யோசித்துக் குழம்பாதீர்கள்..
  •  அதேசமயம், பெற்றோர் சண் டையிடுவதுதான் உங்கள் ஸ்ட்ரெஸ்-க்கு காரணமா? தயக்கம் வேண்டாம்... அதை பெற்றோரிடம் நேரடியாகச் சொல்லுங்கள். சண்டை நடக்கும்போதல்ல... எல்லாம் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தபின்.
  •  மன அழுத்தமாக உணர்கிறீர்களென்றால் உடனடியாக உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்... ஓடுவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஸ்கிப்பிங் என உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்று. உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மன அழுத்தம் மட்டுப்படும். கூடவே யோகா போன்ற தியான முறைகளிலும் ஈடுபட்டால் உங்களை விட்டு மன அழுத்தம் ஓடோடி விடும்.

    யோகாசனம்

  •  'எதற்காக இந்த மன அழுத்தம்..?' என்பதே பல வேளைகளில் உங்களுக்கு விளங்காது. நண்பன் சொன்ன ஏதேனும் வார்த்தையாக இருக்கலாம். ஏதோ ஒரு தோல்வியாக இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த நபர் இன்னொருவருடன் பேசுவதால் இருக்கலாம். எதுவானாலும், அந்தக் காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதற்குள் ரொம்ப மூழ்க வேண்டாம். காரணத்தைக் கண்டுபிடித்தால் பலவேளைகளில் உங்களுக்கே 'ப்ப்பூ... இதுக்கா இவ்ளோ ஃபீல் பண்றோம்' எனத் தோன்றும்.
  •  உங்களுடைய பெஸ்ட் ஹாபியை அந்த நேரம் கையில் எடுங்கள். ஏதேனும் கிரியேட்டிவிட்டி சார்ந்ததென்றால் ரொம்ப நல்லது. மன அழுத்தம், கற்பனை சக்தியை முடக்கும். நீங்கள் உங்கள் ஹாபியின் மூலம் அதை புதுப்பிக்கும்போது உங்கள் மன அழுத்தம் குறையும். 'அப்படி ஹாபி எதுவும் இல்லையே...' என்கிறீர்களா? சரி... சந்தோஷமாக, சந்தோஷமான சினிமா பாருங்கள்.  சிரிப்பதால் ஏற்படும் பலன்களை அறிய இங்கே அழுத்துங்கள்.
    மிகவும் மனப்புழுக்கமாக இருந்தால், மனைவியிடம் அல்லது கணவரிடம் அல்லது  உங்களின் நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரிடம் சென்று மனம்விட்டுப் பேசுங்கள். வேடிக்கை பார்க்கும் நண்பர்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். பின் மன அழுத்தம் இரண்டு மடங்காகிவிடும்.
  •  சமீபத்தில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளை அசை போடுங்கள். உங்களை யாராவது பாராட்டியிருக்கலாம், ஏதேனும் பரிசுகள் வாங்கியிருக்கலாம், நண்பனைச் சந்தித்திருக்கலாம், நகைச்சுவை படித்திருக்கலாம்... ஏதோ ஒன்று!
  •  ஒருவேளை உங்களின் மன அழுத்தம் அதிகமாகி, ஓர் உளவியல் நிபுணரைப் பார்க்க வேண்டும் என மனைவி விரும்பினால்... எகிறிக் குதிக்காதீர்கள். மன அழுத்தம் என்பது காய்ச்சல் போல ஒரு நோய்தான். 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' எனும் சிந்தனைகளை தூர எறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் குணம் பெறலாம்.