பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த 'P' என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே பொறுப்புகள் தலைமேல் வந்து வீழ்வதால் குடும்ப சூழ்நிலையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும். தீட்டும் திட்டங்கள் அவ்வப்பொழுது தடைபட வாய்ப்புண்டு. ஆனால், இடைவிடாது உழைப்பர். இந்த எழுத்துகளில் பெயர் துவங்குவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிந்தால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பிறர் துன்பத்தை தனக்கு வந்தது போல் நினைத்து அவர்களுக்கு உதவுவர். தற்போதைய நிலையை விட உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.