எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது
ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை
வாய்ந்ததாகவே உள்ளது. நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம்
எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு.
ஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். எந்த மாதத்திலும் 9,
18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக
கருதப்படுகிறார்கள். ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை
குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.
வலைப்பதிவு பட்டியல்
ஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை
இருப்பது போல 8 ம் எண்ணிற்கு உண்டு. அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட
ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8ம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததாகவே
கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூட 8 வதாக அஷ்டமி திதியில்
பிறந்தவர்தான். ஒவ்வொரு மாதமும் 8,17,26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 8ம்
எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். 8ம் எண்ணுக்குரிய கிரகம் சனி
பகவானாவார். எட்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் தி.றி ஆகும்.
7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை
மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு,
ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப்
பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள்
ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில்
பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும்
இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில
எழுத்துக்கள் ளி. ஞீ ஆகியவை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)